முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் தொழிற்சாலை மேலாளர் சாலை விபத்தில் மரணம்

கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் ஜோசப் ஜார்ஜ். இவர் சென்னை ரெட்டை ஏரி பகுதியில் வீடு எடுத்து தங்கி வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர

தற்போதைய செய்திகள்

தனியார் தொழிற்சாலை மேலாளர் சாலை விபத்தில் மரணம்

கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் ஜோசப் ஜார்ஜ். இவர் சென்னை ரெட்டை ஏரி பகுதியில் வீடு எடுத்து தங்கி வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த தனியார் தொழிற்சாலை மேலாலர் ஜோசப் ஜார்ஜ்(46) சம்பவ இடத்திலேயே பலியானார்.

கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் ஜோசப் ஜார்ஜ். இவர் சென்னை ரெட்டை ஏரி பகுதியில் வீடு எடுத்து தங்கி வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லையோரம் உள்ள ஸ்ரீ சிட்டி என்ற தொழில் நகரத்தில் கன்ட்ரோல் காம்போனன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வந்தார்.தினமும் தொழிற்சாலைக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் காரில் வந்து போவார். வழக்கம் போல இன்று இவரும் இதே தொழிற்சாலையின்

தலைமை மேலாளர் நெடுமாறனும்(60) காரில் தொழிற்சாலைக்கு வந்துக் கொண்டு இருந்தனர். இந்த காரை டிரைவர் சாதிக்(25) ஓட்டி வந்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் பகுதியில் இவர்கள் வந்துக் கொண்டிருந்த போது சாலை பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த குறுகிய சாலையில் கார் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் போது சாலையோர தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் காரில் கதவு திறந்து ஜோசப் ஜார்ஜ் காரில் இருந்து வெளியே விழுந்ததில் தடுப்பு சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்தில் நெடுமாறன் மற்றும் காரின் டிரைவர் சாதிக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →