வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்!
அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்ருக்கிழமை ஆகிய நாட்களில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி தில்லைக்காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு,
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தஜாமபூஜையும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
சிதம்பரம் எல்லையில் குடிகொண்டுள்ள ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஆனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தசாம பூஜையும் நடைபெற்றது.
அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்ருக்கிழமை ஆகிய நாட்களில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி தில்லைக்காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, ஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீமாகும். ஆனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீதில்லைக்காளிக்கு குடம், குடமாக நல்லெண்ணை அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக்காப்பு செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு, வெட்டிவேர், விளாமுச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீதில்லைக்காளியம்மன் அருள்பாலித்தார்.