மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவது என மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதை அடுத்து, அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக சி.ஐ.டி. காலனி
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவது என மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதை அடுத்து, அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் செல்கின்றனர். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கட்சி நிர்வாகிகள் சிலர் சென்று கருணாநிதியைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாகக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மமகவுக்கு 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.