முகப்பு
தற்போதைய செய்திகள்

15 வருடங்களாக தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள்

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டத்தில் தியாகவள்ளி, பண்ருட்டி வட்டத்தில் புலியூர்காட்டுசாகை, சிதம்பரம் வட்டத்தில் மனக்காடு, வத்தவராயன்தெத்து, காட்டுமன்னார்குடி வட்டத்தில் டி.நெடுஞ்சேரி ஆகிய 5 இடங்களில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:16 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் இல்லாமலேயே ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 5 தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டத்தில் தியாகவள்ளி, பண்ருட்டி வட்டத்தில் புலியூர்காட்டுசாகை, சிதம்பரம் வட்டத்தில் மனக்காடு, வத்தவராயன்தெத்து, காட்டுமன்னார்குடி வட்டத்தில் டி.நெடுஞ்சேரி ஆகிய 5 இடங்களில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதிதிராட நலத்துறையின் கீழ் ஐந்து தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இப்பள்ளிகள் ஒவ்வொன்றிலும் அப்பகுதியில் வாழம் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே தலைமை ஆசிரியர் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சரியான முறையில் மாணவர்களும் கல்வி பயில முடியவில்லை. எனவே மேற்கண்ட 5 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதனை தொடர்பு கொண்ட போது இது சம்பந்தமாக விபரத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடநலத்துறை அதிகாரி குணசேகரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது: 5 பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் இல்லாதது உண்மைதான். நாங்கள் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் கொடுத்துள்ளோம், அவரும் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். விரைவில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மீது தமிழக கல்வித்துறை கவனம் செலுத்தவில்லை என்பது இச்சம்பவம் ஒரு உதாரணமாக திகழ்க்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →