முகப்பு
தற்போதைய செய்திகள்

கெட்டுப்போன பிரசாதம் குறித்து தட்டிக் கேட்டவருக்கு அடி உதை: போலீஸார் குவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கெட்டுப் போன பிரசாதங்களை பிரசாத ஸ்டாலில் விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் கூறவே, அங்கு வந்த இந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கெட்டுப் போன பிரசாதங்களை பிரசாத ஸ்டாலில் விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் கூறி வந்தனர். பிரசாதம் வாங்கிச் சென்ற பக்தர் ஒருவர், அதனை இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சங்கரிடம் காட்டி, தட்டிக்  கேட்குமாறு கூறியுள்ளார். இதை அடுத்து பிரசாத ஸ்டாலுக்கு இந்துமுன்னணி நிர்வாகிகளுடன் சென்ற சங்கர், இதைக் கூறி தட்டிக் கேட்டுள்ளார்.

பிரசாத ஸ்டாலில் இருந்த அதன் உரிமையாளர் வைத்தீஸ்வரனுக்கும் சங்கர் தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கேட்க நீ யார் என்று கூறிய வைத்தீஸ்வர்ன் தரப்பு திடீரென சங்கர் மற்றும் அங்கே கூடிய இந்து முன்னணி தொண்டர்களை அடித்து உதைத்து வெளியேற்ற முனைந்துள்ளது. இதை அடுத்து, கோயில் முன் சங்கர் மற்றும் இந்து முன்னணித் தொண்டர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்தனர்.

மேற்கொண்டு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க கோயிலில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து பின்னர் வந்த ஏடிஎஸ்பி குமாரவேல் தலைமையில் போலீஸார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.