முகப்பு
தற்போதைய செய்திகள்

தீயில் சிக்கி திருமணமான இளம்பெண் சாவு: கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தை அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவரது மனைவி ராஜலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

சிதம்பரம் அருகே திருமணமாண இளம்பெண் ஒருவர் சமையல் செய்யும் போது தீப்பிடித்து உடல் கருகி இறந்தார். மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தாயார் அளித்த புகாரின் பேரில் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவரது மனைவி ராஜலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜலட்சுமி அடுப்பு பற்ற மண்ணெண்ணெய் ஊற்றும் போது புடவையில் தீப்பிடித்தாகக் கூறப்படுகிறது. கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தார். இந்நிலையில் ராஜலட்சுமியின் தாயார் அஞ்சம்மான் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுக்கா போலீஸார் கணவர் திருநாவுக்கரசு, மாமனார் ராமலிங்கம், மாமியார் லெட்சுமி ஆகிய மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →