முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் புதுப்பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி மனு

விருதுநகர் மாவட்ட தலைநகரமான விருதுநகரில் பல ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல் இருந்த காமராஜர் புதுபேருந்து நிலையத்தை இதற்கு முன்பு பணியாற்றிய ஆட்சியர் நடவடிக்கையின்

Updated On : 25 ஜூன், 2013 at 5:01 PM
பகிர்:

விருதுநகர் புதுப்பேருந்து நிலையத்தை செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபார தொழில் சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வியாபார தொழிற் சங்கத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் மாவட்ட தலைநகரமான விருதுநகரில் பல ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல் இருந்த காமராஜர் புதுபேருந்து நிலையத்தை இதற்கு முன்பு பணியாற்றிய ஆட்சியர் நடவடிக்கையின் மூலம் செயல்படச் செய்தார். அதையடுத்து, மறுபடியும் செயல்படாமல் இருந்து வருகிறது. நான்கு வழிச்சாலையில் செல்லும் பேருந்துகள் நகருக்குள் வராமலேயே இப்பேருந்து நிலையத்திற்குள் வந்த செல்வதற்காகவே எம்.ஜி.ஆர். இணைப்புச் சாலை அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாகவே 4 வழிச்சாலையில் செல்லும் பேருந்துகள் புதுப்பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை. இதைப்போலவே, விருதுநகருக்கு அருகில் இருந்து வரும் பேருந்துகளும் வராமலே சென்று வருகிறது. எனவே அரசு பேருந்துகள் அனைத்தும் முறையாக புதுப்பேருந்து நிலையத்திற்குள் சென்று வருவதற்கு ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுகிறோம்.

Advertisement

இப்பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கவும், நான்கு வழிச்சாலையில் இருந்து எம்.ஜி.ஆர் சாலையில் பேருந்துகளை திருப்புவதற்கு காவல் துறை மூலம் கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்கவும் வேண்டும். இப்பேருந்து நிலையத்திற்கள் வராமல் செல்லும் பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் மீது அரசு போக்குவரத்துக் கழகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.