ஆடு, கறவை மாடுகள் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய ஜூலை-1ல் கிராம சபை கூட்டம்
இந்த ஆண்டில் விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வருகிற ஆகஸ்டு மாதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள
விருதுநகர் மாவட்டத்தி்ல விலையில்லா ஆடு மற்றும் கறவை மாடுகள் பெறுவதற்கு ஜூலை 1-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
இந்த ஆண்டில் விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வருகிற ஆகஸ்டு மாதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன் அடிப்படையில் காரியப்பட்டி ஒன்றியத்தில் மாந்தோப்பு-31, மேலக்கன்னாங்குளம்-37, நரிக்குடி ஒன்றியத்தில் நல்லுக்குறிச்சி-30, நாலூர்-28, ராஜபாளையம் ஒன்றியத்தில் வடக்கு தேவதானம்-52, சாத்தூர் ஒன்றியத்தில் என்.மேட்டுப்பட்டி-39, சிவகாசி ஒன்றியத்தில் நெடுங்குளம்-22, ஊராம்பட்டி-36, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கொத்தங்குளம்-80, முள்ளிக்குளம்-31, திருச்சுழி ஒன்றியத்தில் மிதிலைக்குளம்-62, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் கனஞ்சான்பட்டி-19, விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டநத்தம்-20, குந்தலப்பட்டி-17 வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மகராஜபுரம்-92 என மொத்தம் 596 பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
Advertisement
அதேபோல், கறவை மாடுகள் வழங்க குறிப்பிட்ட ஊராட்சிகளில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், காரியாபட்டி ஒன்றியத்தி்ல பாப்பனம்-50, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம் கிராமத்தில்-50 என மொத்தம் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.எனவே இது தொடர்பாக விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஜூலை-1ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதோடு, இத்திட்டம் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.