நிவாரண கணக்கீடு செய்ததில் முறைகேடு: வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து சிதம்பரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டார
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து சிதம்பரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை குமாரமங்கலம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரமங்கலம் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கீடு செய்ய வந்த வேளாண் அதிகாரி செல்வராஜ் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிடாமல் நன்றாக விளைச்சல் பெற்ற நிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.2500 பணம் பெற்றுக் கொண்டு ஒரு தலைபட்சமாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே உடனடியாக முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவிஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.