திருக்கோவிலூர் அருகே தீயணைப்பு துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அப்போது தீயணைப்பு துறையினர்,எங்களிடம் வண்டி இல்லாத காரணத்தால் எங்களால் வர இயலாது என்றும்,அருகாமையில் உள்ள திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அங்கிருந்து வண்டி வரும் என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பரசுராமன் வீட்டிற்கு
திருக்கோவிலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரது கூரை வீடு இன்று பகல் 1.30 மணியளவில் மர்மமான முறையில் தீ பிடித்தது. இதையடுத்து வீட்டில் உள்ளே இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து திருகோவிலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது தீயணைப்பு துறையினர்,எங்களிடம் வண்டி இல்லாத காரணத்தால் எங்களால் வர இயலாது என்றும்,அருகாமையில் உள்ள திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அங்கிருந்து வண்டி வரும் என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பரசுராமன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள 25 வீடுகளும் தீ பிடித்தன. கிராம மக்கள் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை இந்த சம்பவத்தால் 25 வீடுகலும் எரிந்து சாம்பலானது.மேலும் 4 ஆடுகள் எரிந்து கரிகட்டையானது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமக்கள் சுமார் 300 பேர் மணலூர் பேட்டை திருவண்ணாமலை பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்வதற்கு பதிலாக தீ பிடித்த வீடுகளை பார்வையிட சென்றதால் மறியல் மேலும் தொடர்கிறது.இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.