ஸ்ரீவிலி.யில் தீக்காயம் அடைந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் க.பலவேஷம் (70). இவர் ஊட்டியில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சில மாதங்களாக சரிவர நடக்க முடியாமல் உடல் நலக் குறைவாக இருந்துள்ளார். 26.2.13-ம் தேதி படுக்கையில் இருந்து சிகரெட் பற்றவைக்க தடுமாறி எழுந்துள்ளார். சிகரெட்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி.யில் தீக்காயம் அடைந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் க.பலவேஷம் (70). இவர் ஊட்டியில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சில மாதங்களாக சரிவர நடக்க முடியாமல் உடல் நலக் குறைவாக இருந்துள்ளார். 26.2.13-ம் தேதி படுக்கையில் இருந்து சிகரெட் பற்றவைக்க தடுமாறி எழுந்துள்ளார். சிகரெட்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்காயம் அடைந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் க.பலவேஷம் (70). இவர் ஊட்டியில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சில மாதங்களாக சரிவர நடக்க முடியாமல் உடல் நலக் குறைவாக இருந்துள்ளார். 26.2.13-ம் தேதி படுக்கையில் இருந்து சிகரெட் பற்றவைக்க தடுமாறி எழுந்துள்ளார். சிகரெட் பற்றவைத்த தீக்குச்சி அணையாமல் கட்டியிருந்த பாலீஸ்டர் வேஷ்டியில் விழுந்துள்ளது. இதில் இவரின் உடல் கீழ் பாகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலவேஷம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து மல்லி போலீஸில் மகன் பெரிய மாரிமுத்து (32) கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.