தற்போதைய செய்திகள்

பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது மத்திய அரசு : ஆனி ராஜா

மக்களவை தேர்தலுக்காக பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது மத்திய அரசு என தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயப்பாண்டி

மக்களவை தேர்தலுக்காக பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது மத்திய அரசு என தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆனி ராஜா, மத்திய அரசு தனி வங்கியை அமைத்திருப்பது சரியல்ல. தேர்தலுக்காக பெண்களை பகடைக்காயாக பயன்படுத்தும் போக்காகவே இது உள்ளது.

கிராமப் புற பெண்கள் வேலை வாய்ப்பைப் பெற்று வருவாயைப் பெறக் கூடிய வகையில் அமைந்துள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கான நிதியை ரூ.40 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக குறைத்திருக்கிறார்கள்.இதனால் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  வேலை வாய்ப்பு இன்றி, வருவாய் குறைந்த நிலையில், பெண்களுக்கு தனி வங்கி துவக்கியிருப்பது சரியான செயல் அல்ல.

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட மசோதா கொண்டு வந்திருப்பதும், அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதும், தேர்தலுக்காகவே மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.

இலங்கை பிரச்னையில் போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு பற்றி மட்டுமே பேசப்படுகிறது. அங்கு பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் ஆணையம் பேச வேண்டும்.

தபோதைய ஊடகங்கள்  குறிப்பாக தொலைக்காட்சிகள் பெண்களை கீழ்த்தரமாக சித்தரித்து விளம்பரங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT