தற்போதைய செய்திகள்

தென்காசி அருகே பன்றிக்கு வைத்த வெடி: வெடித்துச் சிதறியதால் பரபரப்பு

தென்காசி அருகே பன்றிக்கு வைத்த வெடி வெடித்து சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

பா.​ பிரகாஷ்

தென்காசி அருகே பன்றிக்கு வைத்த வெடி வெடித்து சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
  தென்காசி அருகே மேலஇலஞ்சியிலிருந்து வல்லம் செல்லும் சாலையில் செவ்வாய்கிழமை மாலை அப்பகுதியிலிருந்த மாணவர்கள் விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது 9வயது மாணவர் ஒருவர் கீழே கிடந்த பெரியஅளவிலான கோலிகுண்டு அளவில் கிடந்த ஒரு பொருளை எடுத்து வீசியுள்ளான்.
  அந்த பொருள் வெடித்து சிதறியது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு குற்றாலம் போலீஸார் விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.
  இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது, அப்பகுதியில் பன்றிகளை கொல்வதற்காக யாரோ அந்த வெடிபொருளை வைத்திருந்துள்ளனர்.அதனை அந்த சிறுவர்கள் எடுத்து விளையாடிய போது வெடித்துள்ளது.
  ஆனால் யாருக்கும் எந்தவிதமான சேதமும்,பாதிப்பும் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT