சிதம்பரம் அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
சிதம்பரம் அருகே உள்ள பெத்தாங்குப்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். பெற்றோர் வீட்டில் இல்லாததால் தனியாக இருந்த இவரை அதே ஊரைச் சேர்ந்த
சிதம்பரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள பெத்தாங்குப்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். பெற்றோர் வீட்டில் இல்லாததால் தனியாக இருந்த இவரை அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் (16), இந்திரசூடன் (16), மணிமாறன் (17) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த பிப்.24-ம் தேதி அச்சிறுமியை மயக்க மருந்து கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரிலிருந்து திரும்பிய பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்ததை அடுத்து இன்று இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் மேற்கண்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.