முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு

விருதுநகர் கணேஷ் நகரில் வசிப்பவர் வழக்குரைஞர் சுப்பிரமணியன். இவர் நேற்று அலுவலகம் சென்று, இரவு அங்கேயே படுத்துக் கொண்டாராம். அவரது ம..

Updated On : 11 மார்ச், 2013 at 2:19 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

விருதுநகரில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கணேஷ் நகரில் வசிப்பவர் வழக்குரைஞர் சுப்பிரமணியன். இவர் நேற்று அலுவலகம் சென்று, இரவு அங்கேயே படுத்துக் கொண்டாராம். அவரது மனைவி திருப்பதி சென்றிருந்தாராம். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்குச் சென்ற சுப்பிரமணியன் தன் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு போலீசில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.