முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்: ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ம் நாள் நாளாக செவ்வாய்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:35 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ம் நாள் நாளாக செவ்வாய்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். 2-ம் நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொறியியல் புல மாணவர்கள் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை எரித்து, ராஜபட்சேவிற்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments