அண்ணாமலைப் பல்கலையில் சிறப்பு சிண்டிகேட் கூட்டம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி தொடர்பாக 11 பிரிவின் கீழ் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்து விளக்கமும், என்ன நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு தமிழகஅரசு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவர்மா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து செனட்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி தொடர்பாக 11 பிரிவின் கீழ் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்து விளக்கமும், என்ன நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு தமிழகஅரசு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவர்மா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து செனட், சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள் என்ற கருத்தை அரசுக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அபூர்வாவர்மா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்கலைக்கழக செனட் ஹாலில் சிறப்பு செனட் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பிரதிநிதியாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வியாழக்கிழமை சிறப்பு சிண்டிகேட் கூட்டம் அதன் தலைவர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களான தமிழகஅரசு உயர்கல்வித்துறை இயக்குநர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் பல்கலைக்கழக புல முதல்வர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் செனட், சிண்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறிய கருத்துகளை பதிவு செய்தும், தீர்மானங்களையும் இணைத்து தமிழகஅரசுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.