முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 4-ம் நாள் நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 4-ம் நாள் நாளாக இன்று  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 4-ம் நாளாக இன்று வியாழக்கிழமை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இருப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தோடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் பிரபு, சுப்பிரமணியசிவா, தங்கராஜ், மணிகண்டன், வசந்தராஜா, ராஜன், ராகுல், சிவராஜ், ஜெகதீசன், விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் மயக்கடைந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிரபு, சுப்பிரமணியசிவா ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments