சிதம்பரம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கோரி ஐ.நா மனித
போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கோரி ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.