முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டியாஞ்சலி விழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும்: ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார்

சிதம்பம் நடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவை அதிகமான நடனக்கலைஞர்களை வரவழைத்து அடுத்த ஆண்டு முதல் 10 நாட்கள் நடத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

சிதம்பம் நடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவை அதிகமான நடனக்கலைஞர்களை வரவழைத்து அடுத்த ஆண்டு முதல் 10 நாட்கள் நடத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த மார்ச் 10-ம் தேதி மகாசிவராத்திரியன்று 32-வது நாட்டியாஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. நாட்டியாஞ்சலி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு செ.சி.குப்புசாமி தீட்சிதர் தலைமை வகித்தார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் வரவேற்றார். விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் பேசியது: நாட்டியாஞ்சலியில் பங்கேற்று நாட்டியமாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். சுற்றுலா ஸ்தலமான சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறந்த நாட்டியக் கலைஞர்களை கொண்டு நாட்டியாஞ்சலி நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments