முகப்பு
தற்போதைய செய்திகள்

கண்டெய்னர் லாரியில் தீ : லாரியில் இருந்த கார்களும் கருகின

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ பிடித்ததில், அதில் இருந்த கார்களும் தீயில் கருகின.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் தீ பிடித்ததில், அதில் இருந்த கார்களும் தீயில் கருகின.

நாசிக்கில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று 8 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு சேலத்துக்கு வந்தது. அங்குள்ள  ஒரு ஷோ ரூமில் 4 கார்களை இறக்கிவிட்டு, மீதி 4 கார்களோடு கிளம்பியது.

அந்த கண்டெய்னர் லாரி சேலத்தில் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரியின் எஞ்ஜின் பகுதியில் இருந்து தீப்பிடித்து, லாரி முழுவதும் எரியத் துவங்கியது. இதில் லாரியில் இருந்த கார்களும் எரியத் துவங்கின. 1 மணி நேரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் 20 பேருக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேலத்தில் இருந்து முக்கிய காவல்துறை அதிகாரிகளும் சம்பவப் பகுதிக்கு வந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →