முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல்!

மாணவர்கள் சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் ராஜபட்சேவிற்கு எதிராக கோஷமிட்டு மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

மாணவர்கள் சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் ராஜபட்சேவிற்கு எதிராக கோஷமிட்டு மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

முழு கட்டுரையைப் படிக்க →