சாத்தூர் அருகே கார் விபத்து: ஒருவர் பலி
மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:24 PM
மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. காரினை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனூஸ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் அனூஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.