ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரிகள் மோதல்: டிரைவர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா.குமாரசாமி (63). இவர் லாரி டிரைவராக இருந்தார். திங்கள்கிழமை இரவு ராஜபாளையத்திலிருந்து லாரியில் நூல் பேல்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி குமாரசாமி சென்று கொண்டிருந்தார். செவ்வாய்கிழமை அதிகாலை அழகாபுரி அருகேயுள்ள வடுகபட்டி விலக்கு அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரா.பிச்சைக்கனி என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுதத் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எதிர் திசையில் லாரியை ஓட்டி வந்த வடமதுரையைச் சேர்ந்த வெ.மணி (61) என்பவரைக் கைது செய்தனர்.
Advertisement