முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதம்: வெறிச்சோடி கிடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 12500 ஆசிரியர்கள், ஊழியர்கள் இன்று ஒட்டுமொத்த சிறுவிடுப்பு எடுத்தனர். இதனால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:59 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 27 இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 12500 ஆசிரியர்கள், ஊழியர்கள் இன்று ஒட்டுமொத்த சிறுவிடுப்பு எடுத்தனர். இதனால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம், தேர்வுத்துறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களும் ஆசிரியர்கள், ஊழியர்கள் வராததால் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரை நியமிக்க வேண்டும், நிதிமுறைகேடுகள் குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், 12500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களை தவிர தமிழகத்தில் 30 மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 27-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

முழு கட்டுரையைப் படிக்க →