ஈரோடு காங். அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு
ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று ஈழப் பிரச்னை தொடர்பாகப் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மாணவர் கூட்டமைப்பு, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், இது வரை மாணவர்கள் எவரும் வரவில்லை.