முகப்பு
தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியை மாற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:40 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கிராம மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதாகக் கூறப்படும் இந்த சுங்கச் சாவடிக்காக, முதலில் வேறு ஒரு இடத்தைத் தேர்வு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அந்த இடத்தில் சுங்கச்சாவடியை அமைக்காமல் தற்காலிகமாக புதுக்கோட்டை அருகே அமைத்ததால் தங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகள், புதுக்கோட்டை பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து சமரசம் செய்தனர். அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்ற மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.