அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்க கோரிக்கை
தாங்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தொடர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்கள் மனங்களை குளிர்வித்து வருகின்றீர்கள். திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலுகைகளை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.அந்த கடிதத்தில்:-
தாங்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தொடர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்கள் மனங்களை குளிர்வித்து வருகின்றீர்கள். திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்வோடு இருக்க வேண்டும் என பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறீர்கள். அதில் ஒன்றாக மத்தியஅரசு அறிவித்துள்ள 8 சதவீத அகவிலைப்படியை தமிழகஅரசு ஊழியர்களுக்கு அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அகவிலைப்படியை அளித்தாலும் அதன் நிலுவைத்தொகையை இன்று வரை வழங்கப்படவில்லை என சி.மதியழகன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.