சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பல்கலை. மாணவர் சாவு: இருவர் காயம்
சிதம்பரம் அருகே குமராட்சி காமராஜர்தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (22). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து வரும் இவர் மோட்டார் சைக்கிளில் குமராட்சி கீழக்கரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22), விஜயராஜ் (22) ஆகிய இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திலிருந்து குமராட்சி சென்றுள்ளனர். அப்போது
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டாடா சுமோ மோதியதில் பல்கலை மாணவர் ஒருவர் இறந்தார். இருவர் படுகாயமடைந்து அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே குமராட்சி காமராஜர்தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (22). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து வரும் இவர் மோட்டார் சைக்கிளில் குமராட்சி கீழக்கரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22), விஜயராஜ் (22) ஆகிய இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திலிருந்து குமராட்சி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயமுற்ற ஸ்ரீதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். ஆனந்தராஜ், விஜயராஜ் ஆகிய இருவரும் படுகாயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.