முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கான்வாய் வந்த போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இரவு நேரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதால், போலீஸார் இரவு நேரங்களில் போலீஸார் கான்வாய் மூலம் பாதுகாப்பு அளித்து 20

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:38 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கான்வாய் வந்த போலீஸ் ஜீப் கண்ணாடி மர்மநபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இரவு நேரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதால், போலீஸார் இரவு நேரங்களில் போலீஸார் கான்வாய் மூலம் பாதுகாப்பு அளித்து 20 வாகனங்களை ஒன்றாக சேர்த்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் அருகே பி.முட்லூரிலிருந்து சிதம்பரம் நோக்கி பேருந்துககள், கார்கள் ஆகியவற்றின் முன்புறம் பாதுகாப்பிற்கு கான்வாய் வந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிமுல்லாஷா ஜீப் கண்ணாடியை ஆணையாங்குப்பம் அருகே மர்மநபர்கள் கல்வீதி தாக்கி உடைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →