முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி இடமாற்றம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:39 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர், பதிவாளரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா பல்வேறு நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளராக இருந்த சி.ராஜசேகர் தேர்வுத்துறைக்கும், பதிவாளரின் நேர்முக உதவியாளராக இருந்த நடராஜன் விடுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலக உதவிப் பதிவாளராகவும், தனிஅலுவலர் ரவி செங்கோட்டை படிப்பு மையத்திற்கும், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் மருத்துவக்கல்லூரிக்கும், தொழில்நுட்ப உதவியாளர் சரவணன் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →