கூடங்குளம் அணுமின் நிலைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மக்கள் விரோதமானது: தொல்.திருமாவளவன்
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கில், இந்தியாவின் அணு சக்திக் கொள்கையை மதிப்பதாகவும் கூடங்குளம் அணு உலை செயல்பட அனுமதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.போராடும் மக்களின்
கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்கள் விரோதமானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளிட்ட அறிக்கையில்:-
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கில், இந்தியாவின் அணு சக்திக் கொள்கையை மதிப்பதாகவும் கூடங்குளம் அணு உலை செயல்பட அனுமதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.போராடும் மக்களின் உணர்வுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இந்தத் தீர்ப்பு மக்கள் விரோதமானது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது அதன் பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த போராட்டம் மட்டுமல்ல, அம்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டமும் ஆகும்.போராடும் மக்களின் அடிப்படையான வாழ்வாதார உரிமை உள்பட எவ்விதமான உரிமையையும் கணக்கில் எடுக்காமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வேதனைக்குரியது.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்றும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது வேதனையளிக்கிறது.அணு உலைக்கான பாகங்கள் வழங்கிய ரஷ்ய நிறுவனத்தின் அதிகாரி ஊழல் குற்றசாட்டுகளில் கைது போன்ற சர்ச்சைகள் மட்டுமன்றி கூடங்குளம் அணு உலைக்கு தரக்குறைவான பாகங்கள் வந்திருக்க கூடும் என்று அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவர் அ.கோபாலகிருஷ்ணன் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.இந்த நிலையில் அணு உலையைத் திறப்பதில் இந்த அரசு குறிப்பாக அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களிடம் எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி செயல்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
Advertisement
நீதிமன்றங்களின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், மக்கள் மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது எனும் நம்பிக்கையோடு இந்திய அரசின் அணுக் கொள்கை மற்றும் அணுஉலைகளை எதிர்த்து வெகுமக்களின் போராட்டம் தொடரும்.மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உதயகுமாரின் முயற்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்றும் துணைநிற்கும் என அவர் கூறியுள்ளார்.