வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று வேன்களில், ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.நேற்று ஊட்டியில் இருந்து, சத்தியமங்கலம்
கொடிவேரி அணை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், 19 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று வேன்களில், ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.நேற்று(மே.6) ஊட்டியில் இருந்து, சத்தியமங்கலம் வழியாக குமாரபாளையத்துக்கு வந்துக்கொண்டிருந்தனர்.கொடிவேரி அணை பிரிவு அருகே வேன் வந்தபோது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பவானி காளிங்கராயன்பாளையத்தை முத்துசாமி (27), நிரஞ்சனா(8), சாந்தி (27) உள்பட 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement