முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே மின்னல் தாங்கி ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.மடத்துப்பட்டி என்ற பகுதியில், ஜெகந்நாதன் (70) என்பவர் ஊத்துப்பட்டி ஊராட்சியில்

Updated On : 8 மே, 2013 at 5:22 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:10 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.மடத்துப்பட்டி என்ற பகுதியில், ஜெகந்நாதன் (70) என்பவர் ஊத்துப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்யவே, காளிராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் பக்கம் ஒதுங்கினார். மரத்தின் கீழ் நின்றிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கி, அவர் அந்த இடத்திலேயே பலியானார். மேலும், மரத்தின் கீழ் ஒதுங்கியபடி நின்றிருந்த பசுபதி என்ற பெண்ணும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.