மத்தியக் குழுவை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் பகுதியில் மத்தியக் குழுவினர் இன்று வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சூழ்ந்து கொண்டு தங்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறினர்.

அவரக்ளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகம் மூலம் பணி வழங்கப்பட்டதாகவும், வங்கி மூலம் நிதி வழங்கப்படுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் இரு நாட்களில் சரி செய்து விடுவோம் என்றும் கூறினார். இதைக் கேட்டு பெண்கள் சமாதானம் அடைந்தனர். இது சற்று நேரம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.