முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டியை விடுவிக்க கோரி பாதயாத்திரை

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சிறையில் இருந்து விடுவிக்க கோரி கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு முதல் ஆரம்பாக்கம் வழியே ஆந்திர மாநிலம்

தற்போதைய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டியை விடுவிக்க கோரி பாதயாத்திரை

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சிறையில் இருந்து விடுவிக்க கோரி கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு முதல் ஆரம்பாக்கம் வழியே ஆந்திர மாநிலம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:43 AM
பகிர்:

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சிறையில் இருந்து விடுவிக்க கோரி கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு முதல் ஆரம்பாக்கம் வழியே ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டை வரை அக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று பாதயாத்திரை மேற்கொண்டனர்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் சி.பி.ஐ பொய் வழக்கு போட்டு கடந்த ஒரு வருட காலமாக அவரை சிறையில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்கும்படியும் கோரி கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு ஆஞ்சனேயர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை செங்காளம்மா கோவில் வரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

இந்த பாதயாத்திரைக்கு தடா மண்டல ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.சுந்தர ரெட்டி தலைமை தாங்கினார். பாதயாத்திரையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பியுமான நலவல சுப்பிரமணியம், சூளூர்பேட்டை தொகுது பொருப்பாளர் தப்பல் ராஜா ரெட்டி பாதயாத்திரையை துவக்கி வைத்தனர். முன்னதாக தடா மண்டல ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் ஏ.ஜே.முருகன் வரவேற்றார். சிறுபான்மை பிரிவு மண்டல தலைவர் அன்சர் பாஷா நன்றி கூறினார்.

பாதயாத்திரையின் போது கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பேசிய முன்னாள் எம்.பி நலவல சுப்பிரமணியம் குறிப்பிடுகையில் நாட்டையை ஊழல்களால் நாசம் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசும், ஆந்திர மாநில காங்கிரஸ் அரசும் இணைந்து சி.பி.ஐ-யை வற்புறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் வளர்ச்சியை கண்டு பொறாமையால் அவர் மீது பொய் வழக்கு போட்டு கடந்த ஒரு வருடமாக அவரை  சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை விடுதலை செய்யவும் வேண்டும் என்றதோடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் படு தோல்வியடையும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →