முகப்பு
தற்போதைய செய்திகள்

தலித்தை முதல்வராக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக யாரை நியமிக்க வேண்டுமென்பதை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அனைவரின் கடமை. எனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்பதால், வடகர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நான்

Updated On : 12 மே 2013, 4:21 pm IST
பகிர்:

தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்காதது அச்சமுதாய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக யாரை நியமிக்க வேண்டுமென்பதை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அனைவரின் கடமை. எனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்பதால், வடகர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவதை எந்தவகையிலும் ஏற்கமுடியாது. உள்கட்சிவிவகாரங்களை அதற்குரிய கட்சி மேடைகளில்மட்டுமே விவாதிக்க வேண்டும்.கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் விருப்பத்திற்கு இணங்க நல்லாட்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடத்தை யாரும் ஏற்படுத்தக்கூடாது.

Advertisement

Advertisement

கருத்துவேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், புதிய ஆட்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிகக வேண்டும். வன்முறையில் ஈடுபடாமல், அமைதிகாக்கும்படி காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி தரவில்லையே என்ற ஏமாற்றம் அச்சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு கட்சி மேலிடம்தகுந்த நேரத்தில் தீர்வுகாணும். கட்சிமேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சியின், ஆட்சியின் நலன்கருதி அனைவரும் ஒற்றுமைஉணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.