போலீஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
அரியானா மாநிலம் ரோக்தாக் அருகே உள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஒருவர் ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நோக்கி சென்றுள்ளனர். அப்போது போலீசார்
அரியானா மாநிலம் ரோக்தாக் அருகே உள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஒருவர் ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நோக்கி சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ்களுக்கும் போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தும்,. கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். .இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.