ஸ்டவ் மீது தவறி விழுந்து பெண் பலி
ஆவடி பாண்டியன் நகர், வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிராம். இவரது மனைவி மேகலா (24).இவர் கடந்த 8-ம்தேதி மண்எண்ணை ஸ்டவ்வில் பால் காய்ச்சினார். அப்போது அருகில் வந்த அவரது
ஆவடி பாண்டியன் நகர், வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிராம். இவரது மனைவி மேகலா (24).இவர் கடந்த 8-ம்தேதி மண்எண்ணை ஸ்டவ்வில் பால் காய்ச்சினார். அப்போது அருகில் வந்த அவரது குழந்தையை தடுப்பதற்காக மேகலா ஓடிச்சென்றபோது தவறி மண்எண்ணை ஸ்டவ் மீது விழுந்தார். இதில் பலத்த தீ காயங்களுடன் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.