முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு: மூன்று பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சல்லிபட்டி-சிவந்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் முனிப்பாண்டி (30). இவரது மனைவி முத்துநாச்சியார் (28). கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இரவு முத்துநாச்சியார் வீட்டிற்கு இதே இடத்தைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் கருப்பசாமி என்பவர்

Updated On : 12 மே 2013, 6:26 pm IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் நடைபெற்ற மோதலில்  இன்று மாலை கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சல்லிபட்டி-சிவந்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் முனிப்பாண்டி (30). இவரது மனைவி முத்துநாச்சியார் (28). கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இரவு முத்துநாச்சியார் வீட்டிற்கு இதே இடத்தைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் கருப்பசாமி என்பவர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் முனிப்பாண்டியும் இருந்துள்ளார். கருப்பசாமி மற்றும் அவரது மனைவி மீது சந்தேகமுற்ற முனிப்பாண்டி பிரச்னை செய்து சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து கடந்த இரு மாதங்களாக கருப்பசாமி வெளியூர் சென்று விட்டார்.இன்று ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது கருப்பசாமி இவரது சகோதரர் செல்லத்துரை, அவரது மனைவி மகாலட்சுமி, மற்றொரு சகோதரர் முருகன், அவரது மனைவி சிவகாமி மற்றும் பசுபதி இவரது மனைவி மகாலட்சுமி ஆகிய 7 பேரும் சேர்ந்து முனிப்பாண்டி வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டு பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் முத்துநாச்சியார் மற்றும் முனிப்பாண்டிக்கு பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு மகாலட்சுமி, சிவகாமி ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் கருப்பசாமி, செல்லத்துரை, முருகன், பசுபதி ஆகியோரைத் தேடி வருகிறார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.