சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இருவர் கைது
வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன்
தற்போதைய செய்திகள்சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இருவர் கைது
வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன் பாலமுருகன் (27), இதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெயசீலன் (33) ஆகியோர் பொது இடத்தில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டு, சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இது குறித்து சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.