முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுக்கும் நிகழ்ச்சி!

சித்திரை மாத திருவாதிரை நக்ஷத்திரமான இன்று திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுக்கும் விழா நடைபெற்று வருவது வழக்கம். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தரத்தன்று சீர்காழி திருத்தோணிபுரத்து ஈசர் கோயிலில் திருஞானசம்பந்தர் 3 வயதாக இருக்கும் போது தந்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு அம்பாள் திருமுலைப்பால் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சித்திரை மாத திருவாதிரை நக்ஷத்திரமான இன்று திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுக்கும் விழா நடைபெற்று வருவது வழக்கம். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தரத்தன்று சீர்காழி திருத்தோணிபுரத்து ஈசர் கோயிலில் திருஞானசம்பந்தர் 3 வயதாக இருக்கும் போது தந்தை சிவபாத கிரிபாதருடன் குளத்திற்கு சென்றார். அப்போது சிவபாத கிரிபாதர் நீரில் மூழ்கி ஜபம் செய்யும் அகமர்ஷனஜபத்தில் ஈடுபட்டார். தந்தையை காணாதது கண்டு ஞானசம்பந்தர் குரலி்ட்டு அழுதார். இதனை பார்த்த சிவபெருமான், அம்பாளிடம் பால் வழங்குமாறு கூறினார். அம்பாள் குளக்கரையில் எழுந்தருளி தனது முலைப்பாலை, ஞானப்பாலாக தங்க கின்னத்தில் ஞானசம்பந்தருக்கு வழங்கி அழுகையை நிறுத்தியதாக வரலாறு கூறுகிறது.

அச்சிறப்பு வாய்ந்த திருமுலைப்பால் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் உச்சிக்காலத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக திருஞான சம்பந்தருக்கு உற்சவருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நான்கு வீதிகளிலும் வலம் வந்தார். பின்னர் சித்சபை முன்பு ஸ்ரீநடராஜர் சன்னதியில்  (பக்தர்களால் அளிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை போட்ட பசும்பாலை) திருஞான சம்பந்தருக்கு நெய்வேத்யம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று நிகழ்ச்சி கண்டு தரிசித்தனர். மேலும் சேக்கிழார் பெருமான் திருவாதிரை அன்று தான் பெரியபுராணத்தை அரங்கேற்றினார் என்பதும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன்மீண்ட நாயனார் குருபூஜை நடைபெற்றது என்பதும் மேலும் சிறப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →