கிருஷ்ணசாமி டிஜிட்டல் பேனர் கிழிப்பு: மூவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கிருஷ்ணசாமியின் படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனரை கிழித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த டிஜிட்டல் பேனரை யாரை கிழித்து சேதப்படுத்திவிட்டார்கள். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சு.பொன்னுச்சாமி (28) என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அயன் நத்தம்பட்டியைச் சேர்ந்த பா.கார்த்திக் (29), மு.தங்கப்பாண்டி (27), ப.மணிகண்டன் (30) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
Advertisement