தம்பதியரை தாக்கிய ஆயுதப்படை காவலர் கைது
பாளையங்கோட்டை மகாராஜநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தங்கையா மகன் பரமசிவம் (34). இவர், ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் மகாராஜநகர் 18-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன் (40).இவர்கள் இருவரும் சேர்ந்து பங்குச்சந்தையில் அதிகளவில்
பாளையங்கோட்டையில் தம்பதியரை தாக்கியதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை மகாராஜநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தங்கையா மகன் பரமசிவம் (34). இவர், ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் மகாராஜநகர் 18-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன் (40).இவர்கள் இருவரும் சேர்ந்து பங்குச்சந்தையில் அதிகளவில் பணம் முதலீடு செய்தனராம். இதில் நஷ்டம் ஏற்பட்டதாம். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாம். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராதாகிருஷ்ணனை, பரமசிவம் தாக்கினாராம். இதனை தடுக்க முயன்ற ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயலெட்சுமியையும் அவர் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஜெயலெட்சுமி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, ஆயுதப்படை காவலரான பரமசிவத்தை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement