காகித ஆலை இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி பலி
பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.
பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நஞ்சைபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் குணசேகரன்(52). இவர் சுமார் 25 வருடங்களாக பழனி அருகே சாமிநாதபுரம் விஷ்ணுவர்தன் காகித ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது கைசிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.