முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் நிகழ்ச்சி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் நிகழ்ச்சி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் எஸ்.சேகர் ஆகியோர் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.டி.சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர்கள் பாபு (எ) வெங்கடாச்சலம், ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மை பொதுச்செயலர் கே.என்.பாஷா, மாவட்டத் தலைவர் ஜாபர் சாதிக், மாவட்டத் துணைத் தலைவர் முகமது அர்ஷத், இளைஞர் காங்கிரஸ் ஈரோடு மக்களவைத் தொகுதி முன்னாள் தலைவர் அ.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.