முகப்பு
தற்போதைய செய்திகள்

 தீயை அணைக்க முயன்ற முதியவர் தீ விபத்தில் சாவு

திருவள்ளூர் அருகே வயல் வெளியில் எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற முதியவர் தீயில் காயம்பட்டு பலியானார்.

Updated On : 24 மே, 2013 at 11:22 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:23 PM

திருவள்ளூர் அருகே வயல் வெளியில் எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற முதியவர் தீயில் காயம்பட்டு பலியானார்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பென்னாலூர்பேட்டை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராயணின் மகன் முனுசாமி (68). இவர் புதன்கிழமை அன்று அவருக்குச் சொந்தமான வயல் வெளியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 அப்போது அருகில் உள்ள நிலத்தில் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அந்த தீ நமது வைக்கோல் போரில் தீ பரவும் என பயந்து அந்த தீயை முனுசாமி அணைக்க முயன்றார். அப்போது அவரது உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது.

Advertisement

 அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக முனுசாமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் முனுசாமி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாபு கொடுத்த புகாரின் பேரில் பென்னாலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.