முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் ரயில்வே காலனியில் தினசரி குடிநீர் விநியோகம் கேட்டு ரயில் மறியல்

விருதுநகர் ரயில்வே காலனியில் வாரந்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை காலையில் 5 நிமிடம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:23 PM

விருதுநகர் ரயில்வே காலனியில் வாரந்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை காலையில் 5 நிமிடம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

விருதுநகர் புது ரயில்வே காலனி, பழைய ரயில்வே காலனிப்பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த இரண்டு வாரங்களாக தாமதமாகவே விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், காலனிப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிடித்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வரமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வெளியில் இருந்து குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் காலனிப்பகுதியில் சுத்தகரிப்பு மையம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். எனவே ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி காலையில் 10.30 மணிக்கு குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிலையத்தில்  திடீரென மறியல் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, விரைந்து வந்த ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பஜார் காவல் நிலைய போலீஸார், ரயில் நிலைய போலீஸார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, குடிநீர் நாள்தோறும் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அதோடு சுத்தகரிபபு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதையடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் கலந்தாய்வு செய்து செய்து தர ஏற்பாடு செய்து தரப்படும் என கூறிய பின்னர் கலைந்து சென்றனர். அதன் பின்னரே 5 நிமிடம் வரையில் நின்று தாமதமாக புறப்பட்டுச் சென்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.