முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.13 லட்சம் அமிலம் கடத்திய கொரட்டூர் வாலிபர் கைது

சென்னை கொரட்டூர் வாலிபர் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமிலம் கடத்திய வழக்கில் தப்பி ஓடிய அவர் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:54 AM
பகிர்:

சென்னை கொரட்டூர் வாலிபர் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமிலம் கடத்திய வழக்கில் தப்பி ஓடிய அவர் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்

துபாயில் இருந்து சென்னை வந்த போது ரூ.13 லட்சம் அமிலம் கடத்தி வந்த கொரட்டூர் வாவிபர் தப்பி ஓடினார் சனிக்கிழமை மீண்டும் துபாய்க்கு செல்லும் போது அதிகாரிகள் சோதனையில் சிக்கினார் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

துபாயில் இறுந்து எமிரேடஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த 1ம் தேதி  அதிகாலை சென்னை வந்தது அதில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்அப்போது சென்னை கொரட்டூர் சேர்ந்த முகமது இஸ்மாயில்(36) மீது சந்தேகம் வந்தது,உடனே அவரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் தங்க நகை செய்வதற்கு பயன்படும்ரோடினா என்ற அமிலம் இருந்தது இந்த அமிலம் 100மில்லி ரூ.30 ஆயிரம் ,பையில் இருந்த மொத்த அமிலத்தின் மதிப்பு ரூ.13லட்சம் ஆகும் ஆனால் அப்போது சோதனை நடக்கும் போது முகமது இஸ்மாயில் தப்பி விட்டார் மீண்டும் சனிக்கிழமை துபாய் செல்ல சென்னை விமானநிலையத்துக்கு வந்தார் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யும் போது கண்டு பிடித்தனர் இதைதொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →