அம்பை உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் மே 29 ல் கும்பாபிஷேகம்
அம்பாசமுத்திரம் அருள்மிகு உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வரும் 29 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரம் அருள்மிகு உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வரும் 29 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோவிலில் பல லட்சம் மதிப்பில் பஞ்சவர்ண கோபுரமும், விமானமும் ஆகியன புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் 29 ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 7.00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகி்றது. மகா கணபதி, புண்யாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9 மணிக்கு நவக்கிரஹ பூஜை, நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை, மாலை 4 மணிக்கு தீர்த்த சங்கிரஹனம், 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, 6.30 க்கு கும்ப அலங்காரம், அம்பாள் யாகசாலை பிரவேசம், முதல் காலயாகசாலை பூஜை ஆகியன நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 2 ம் யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு 3 ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல்,
29 ம் தேதி (புதன்கிழமை) காலை 4 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, ஸ்பர்ஸாஹூதி, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 5 மணிக்கு யாத்ராதானம், 5.45 மணிக்கு கடம்புறம்பாடு, காலை 6 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 6.35 மணி முதல் 7 மணிக்குள் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையடுத்து காலை 7.30 மணிக்கு அன்னதானம், 9.30 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு பிரசன்ன பூஜை, சகஸ்ரநாமம், தீபாராதனை, 9 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறும்.